நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கான 33% தனி ஒதுக்கீடு விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் கபில்சிபில் அறிவித்திருக்கிறார். மகளிர் இடஒதுக்கீடுக்கு மத்திய அமைச்சரவையும் அனுமதி அளித்துவிட்டது. விரைவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு மசோதா சட்டமாக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
ஆனால், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் இல்லையென்றால் மகளிர் இடஓதுக்கீட்டை எதிர்ப்போம் என லாலு தலைமையிலான ராஷ்ரிடிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
நான் மத்திய அமைச்சரவையில் இருந்தவரை மகளிர் இடஓதுக்கீடு வராமல் தடுத்தேன் என்கிறார் லாலு, தங்கள் இனம் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வருவதால் தங்கள் இனப்பெண்களின் அரசியல் அதிகாரத்துக்காக (உண்மையில் அதிகாரம் செலுத்தப்போவது வீட்டு ஆண்கள்தான்) குரல் கொடுக்கின்றன ராஷ்டிரிய ஜனதா தள், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள்.
இந்த கட்சிகளை வளர்த்துவிட்டதும் இன்று வரை வாக்கு வங்கிகளாக இருப்பதும் முஸ்லிம்கள் தான், கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்யும் மிஸ்ரா ஆணைய அறிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை பற்றி ஆளும் கட்சியான காங்கிரஸ் உள்பட யாருக்கும் கவலையில்லை. ஆனால் யாரும் குரல் கொடுத்து போராடாத மகளிர் இட ஒதுக்கிட்டை நடைமுறைப்படுத்த வரிந்து கட்டி நிற்கின்றது காங்கிரஸ்.
முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கே அரசியல் அதிகாரத்தில் பங்களிக்கப்படுகிறதா? வெள்ளையர்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவம் கூட இந்த முஸ்லிம்களின் ஓட்டுக்களை அறுவடை செய்யும் அரசியல் கட்சிகளின் அரசுகளில் கொடுக்கப்படவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் ஆண்களே இன்னும் நாடாளுமன்றம், சட்டசபையை எட்டிப் பார்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இப்போதுதான் மெல்ல மெல்ல முஸ்லிம் சமூகம் அரசியல் அதிகாரத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்கான தயாரிப்புகளில் இறங்கியுள்ள சூழ்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் அதற்கு வேட்டு வைக்கும் வேலையில் இறங்கியுள்ளது காங்கிரஸ்.
மகளிர் இடஒதுக்கீடு என்று அறிவித்து விட்டு எங்கெல்லாம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அந்த தொகுதிகளை மகளிருக்கான ரிசர்வ் தொகுதியாக அறிவித்து முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியை ஒட்டு மொத்தமாக அழித்து விட திட்டம் தீட்டுகின்றன ஆதிக்க சக்திகள்.
இதற்கு முஸ்லிம் சமுதாயம் உடன்பட்டு விடக்கூடாது. ஏற்கனவே உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் மகளிர் இடஒதுக்கிடு அறிவிக்கப்பட்டு முஸ்லிம் பெரும்பான்மை ஊர்களெல்லாம் மகளிருக்கு ஒதுக்கப்பட்டு சமுதாயத்தின் அறிவியல் அதிகாரத்தை நசுக்கி வைத்திருக்கும் சூழலில் சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் மகளிர் இடஒதுக்கீடு எனும் மோசடியை நாம் அனுபவித்து விடமுடியாது.
மகளிர் இட ஒதுக்கீடின் மூலமாக மீண்டும் உயர்சாதி பெண்களே அதிகாரத்தை சுவைக்க முடியுமே தவிர முஸ்லிம்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வாய்ப்பு கிடைக்க போவதில்லை. கல்வி, வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீட்டை வழங்கி விட்டு, அடுத்து அரசியல், அதிகாரத்திலும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க மத்திய அரசு முன்வரட்டும்.
பிறகு பேசலாம் மகளிர் இடஒதுக்கீட்டை பற்றி, இப்போது ஏன் இந்த அவசரம் என்பது தான் சிறுபான்மை மக்களின் கேள்வி?