
திருநெல்வே மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 04.11.2009 அன்று கிளைத் தலைவர் பக்ருதீன் அலி அஹமது தலைமையில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மவ்லவி. அப்துல் மஜித் மஹ்லரி ஷபாக்களின் தியாக வரலாறு என்ற தலைப்பிலும், மவ்லவி மிஸ்பாஹுல் ஹுதா முகரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஜகாத் நிதியிருந்து, ஒரு சகோதரருக்கு தொழிலூ உதவியாக ரூ. 12.000 மும், மருத்துவ உதவியாக இரண்டு நபர்ககளுக்கு தலா ரூ. 3,000மும் வழங்கப்பட்டது.
குர்பானி தோல் வசூல் செய்து ரூ. 30,000த்தில் 7 நபர்களுக்கு தையல் எந்திரமும், ஒரு பெண்ணிற்கு மாவு அரைக்கும் கிரைண்டரும் வழங்கப்பட்டது.





